ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதி: நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்ட உத்தரவு
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதியாகியுள்ள நிலையில், அவரின் பயனாளிகளுக்கு கிடைக்க வேண்டிய ஆயுள் காப்புறுதி பலன்களை ஒரு வாரத்துக்கு இடைநிறுத்துமாறு இரண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவு நீதிமன்றத்தால் தளர்த்தப்பட்டுள்ளது.
குறித்த தரப்பினருக்கான காப்புறுதி கொடுப்பனவை நிறுத்த வேண்டிய தேவைப்பாடு தொடர்ந்தும் இல்லையென கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்ரா ஜயசூரிய நேற்று(15.11.2023) அறிவித்துள்ளார்.
அத்துடன் நட்டஈட்டை பெற்றுக் கொள்ள சில தரப்பினர் முயற்சிப்பது குறித்து எந்தவித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை எனவும் நீதவான் அறிவித்துள்ளார்.
குற்றச்செயல் என உறுதி
வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் குற்றச்செயல் என உறுதியாகியுள்ளது.
இந்தநிலையில், ஷாப்டரின் சார்பாக அவரின் தரப்பினருக்கு காப்புறுதி நட்டஈடு வழங்கப்படுவதை ஒரு வார காலத்திற்கு கைவிடுவதற்கான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு பொலிஸார் அண்மைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

ஜனசக்தி குழுமத்தின் முன்னாள் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டர், 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி பொரளை பொது மயானத்துக்கு அருகில் தமது காரில் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டார்.
பின்னர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
வெல்லம்பிட்டி பாடசாலையில் நேர்ந்த அனர்த்தம்! கல்வி அமைச்சரின் பணிப்புரை - இடைநிறுத்தப்பட்டுள்ள கல்வி நடவடிக்கை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam