வெடுக்குநாறி மலையில் கைதானவர்களின் உறவுகள் கண்ணீர் போராட்டம்
வவுனியா வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டலர்களின் உறவுகள் வவுனியா நீதிமன்றம் முன்பாக கண்ணீர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்ததையடுத்து, அவர்களின் உறவினர்கள் நீதிமன்றம் முன்பாக கண்ணீர் விட்டு அழுதனர்.
கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் கைவிலங்கிடப்பட்டு சிறைச்சாலைக்கு உத்தியோகத்தர்கள் அழைத்துச் செல்லும் அந்த காட்சியினை பார்த்து நீதிமன்றத்திற்கு முன்பாக நின்ற அவர்களின் உறவினர்கள் எந்தவொரு குற்றமும் செய்யாமல் இறைவனை வழிபட்டமைக்கு இவ்வாறு சிறைவாசம் அனுப்பவிப்பதாக தெரிவித்து கண்ணீர் அழுதிருந்தனர்.
நீதிமன்றம் உத்தரவு
அவர்களை கடந்த 9 ஆம் திகதி சனிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் விசாரணைகள் நிறைவுபெறாத காரணத்தால் இன்று (12.03) வரை அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (12.03.2024) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இன்றையதினம் நீதிமன்றில் அவர்களை முற்படுத்திய சமயத்தில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.







சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam
