காதலுக்கு மறுப்பு - இளம் ஆசிரியருக்கு நேர்ந்த விபரீதம்
காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் கோபமடைந்த ஒருவர், ஆசிரியர் ஒருவரின் 64,000 ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியை திருடிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை, நாகொடையைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
கடந்த 3 ஆம் திகதி, விகாரைக்கு செல்ல மதுகம நகருக்கு பேருந்தில் வந்தபோது சந்தேகநபர்,கைப்பேசியை பறித்துவிட்டு தப்பிச்சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியை சந்தேகநபருடன் சிறிது காலமாக உறவில் இருந்ததாகவும், பின்னர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் கோபத்தில் சந்தேக நபர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
ஆசிரியை உடலில் ஏற்பட்ட கீறல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை கைது செய்ய மதுகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri