றீச்சா உணவுத் திருவிழாவில் நடந்தது என்ன...! அம்பலமாகும் சிசிரிவி காணொளிகள்
நான்கு நாட்களுக்குத் திட்டமிடப்பட்ட அட்சய பாத்திரம்' றீச்சாவின் உணவுத்திருவிழா, எதிர்பாராத விதமாக மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
விழாவில் திருப்தியடையாத அல்லது உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத மக்கள், தங்களின் பற்றுச்சீட்டு அல்லது டோக்கன் சீட்டுகளை சமர்ப்பித்தால் பணத்தை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வின் போது திட்டமிட்டே சிலர் குழப்பங்களை ஏற்படுத்தியதாகவும், ஊழியர்களைத் தாக்கியதாகவும் றீச்சா உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கான ஆதாரமாக சிசிடிவி (CCTV) காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரும் அதே வேளையில், ஊழியர்களை அநாகரிகமாக நடத்துவதையும் வதந்திகளைப் பரப்புவதையும் தவிர்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...