உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! - சந்தேகநபர்களை கைது செய்ய சிவப்பு பிடியாணை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்களை கைது செய்வதற்கான சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர இதனை அறிவித்துள்ளார். தாக்குதலுடன் தொடர்புடைய எவரையும் சட்டத்திடமிருந்து தப்புவதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 21 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதேவேளை, 2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர்குண்டு தாக்குதலில் 250க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு உரிமை கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.





சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
