இஸ்ரேலை பழிவாங்க சிவப்புக்கொடியை பறக்கவிட்ட ஈரான்!
பழிவாங்குதலை பிரகடனப்படுத்துகின்ற சிவப்புக் கொடியை ஈரானிலுள்ள ஜம்கறான் மசூதி பள்ளிவாசலில் பறக்கவிட்டுள்ளது ஈரான்.
உலகிலுள்ள பிரபல்யமான மதஸ்தலங்களுள் ஒன்றான் ஜம்கறான் பள்ளிவாசலில் சிவப்பு கொடியைப் பறக்கவிடுவது என்பது, இரத்தம் சிந்தப்படுவதற்கான அடையாளமாகவும், இரத்தப்பழியைத் தீர்ப்பதற்கான ஒரு அடையாளமுமாகவே நீண்டகாலமாகப் பார்க்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், 'ஹமாஸ் தலைவர் இஸ்மயில் ஹணியே ஈரான் தலைநகர் டெகரானில் வைத்து இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது கடுமையான பதில் தாக்குதல் மேற்கொள்ளப்படும்' என்பதற்கான அடையாளமாகவே, ஜம்கறான் பள்ளிவாசலில் சிவப்புக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது என்று கூறுகின்றார்கள் ஈரானிய ஊடகவியலாளர்கள்.
இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல் பற்றி ஈரானில் இருந்தும், ஈரானின் துணை இராணுவக் குழுக்களிடம் இருந்தும் வெளிப்படுகின்ற எச்சரிக்கைகளும், பிரகடனங்களும், ஒரு மிகப் பெரிய யுத்தம் மத்திய கிழக்கில் மூழப்போகின்றது என்பதை கட்டியம் கூறுவதாகவே இருக்கின்றது.
இந்த நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் மேற்கொள்ளலாம் என்று கூறப்படுகின்ற பழிவாங்கும் நடவடிக்கை பற்றியும், ஈரான் தலைநகர் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் பற்றியும் ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |