முல்லைத்தீவு கடலில் குளிக்க சென்று காணாமற் போன மூவரும் உயிரிழப்பு! (VIDEO)
பிந்திய இணைப்பு.....
வவுனியாவில் இருந்து வருகை தந்த இளைஞர்கள் மூவர் முல்லைத்தீவு கடலில் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் நேற்றைய தினமே ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் ஏனையவர்களை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வந்தது.
இந்த நிலையில் இரண்டாவது நபரின் சடலம் இன்று காலை தீர்த்தக்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது இதனை தொடர்ந்து மூன்றாவது நபரின் உடலம் சற்று முன்னர் அளம்பில் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.
தகவல் - குமணன்
முல்லைத்தீவு கடலில் காணாமற் போன மற்றுமொரு இளைஞனும் சடலமாக மீட்பு: தேடும் பணி தீவிரம்
முல்லைத்தீவு கடலில் காணாமல் போன மற்றுமொரு இளைஞனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு கடற்கரைக்கு வானில் வந்த மூன்று இளைஞர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென கடலில் மூழ்கியுள்ளனர்.
குறித்த மூவரையும் நீண்ட நேரமாக காணாத நிலையில் அவர்களுடன் கடலுக்கு சென்ற புதுக்குடியிருப்பை சேர்ந்த யுவதி முல்லைத்தீவு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார், கடற்படையினர், பொதுமக்கள் இணைந்து அவர்களை தேடும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
தேடுதலின் போது ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டு முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏனைய இருவரையும் தேடும் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
கடலில் மூழ்கி மாயமான மூவர்! நள்ளிரவு தாண்டியும் தேடுதல் தீவிரம் (Photos)
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri