தலதா மாளிகை வளாகத்திற்குள் துப்பாக்கி தோட்டாக்கள் மீட்பு
தலதா மாளிகையின் பாதுகாக்கப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராஜா வீதி வழியாக தலதா மாளிகை வளாகத்திற்குள் இன்று (18) பிற்பகல் நுழைந்த கண்டி மாநகர சபைக்கு சொந்தமான குப்பை வண்டியில் இருந்து T-56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 32 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து, குப்பை வண்டியின் சாரதி மற்றும் உதவியாளர்கள் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்த லொறி தலதா மாளிகை வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்னர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது லொறியில் சிறிய உரப்பையில் வெடிமருந்து உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கண்டி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமில் ரத்நாயக்கவின் மேற்பார்வையில், பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. சேனாதீர உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

ரஷ்யாவின் கிரிப்டோ நெட்வொர்கை குறிவைத்துள்ள பிரித்தானியா - புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பு News Lankasri
