6 பேரின் உயிரை பறித்த சம்பவம் - பிரேத பரிசோதனையில் வெளியான உண்மை - சிக்கிய பெண்
புத்தளத்தில் சட்டவிரோத மதுபானம் அல்லது கசிப்பு அருந்தியதால் உடல்நலக் குறைவால் உயிரிழந்த 6 பேரில் 05 பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட ஐவரின் பிரேத பரிசோனை நேற்று சிலாபம் பொது மருத்துவமனையின் சிறப்பு நீதித்துறை மருத்துவ அதிகாரி டி.கே. விஜேவர்தனவால் நடத்தப்பட்டது.
அதற்கமைய, இந்த மரணங்கள் மெத்தில் அல்கொஹால் விஷம் காரணமாக நிகழ்ந்ததாக பிரேத பரிசோதனையின் முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. .
மேலதிக பரிசோதனை
எனினும், உயிரிழந்தவரின் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்காக அரச பகுய்வாளருக்கு அனுப்பவும் மருத்துவ அதிகாரி முடிவு செய்துள்ளார்.

உயிரிழந்த மற்ற நபரின் பிரேத பரிசோதனை இன்று நடத்தப்பட உள்ளது.
மதுபானம் அருந்தி உடல்நலக்குறைவு ஏற்பட்ட மேலும் 08 பேர் தற்போது நீர்கொழும்பு மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பெண்ணை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 47 வயதுடையவர் எனவும், அவர் காலவத்தை, கிழக்கு பண்டிரிப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri