தமிழ்த்தேசிய பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதியுடன் பேச தயார்!சிவஞானம் சிறீதரன்
தமிழ்த்தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கிளிநொச்சி - இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது.இந்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம்.அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.

இனத்தின் மீது நடைபெற்ற போர்
ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம். கோட்டபாய ராஜபக்சவுடனும் ஒரு தடவை பேசியிருக்கிறோம்.இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார். இவர் தனது அக்கிராசன உரையில், புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா? அல்லது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால் விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கின்றது.

பொருளாதார பிரச்சினை
40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது. ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர் தான் என்பதை புரிந்து வைத்திருப்பார்.

எம்மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலையை சீர்செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை
தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும்
கலந்து கொண்டிருந்தார்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri