நாளைய தினமே அரசில் இருந்து வெளியேற தயார்! - மைத்திரி தரப்பு அதிரடி அறிவிப்பு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்தால் நாளைய தினம் கூட தமது அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தயார் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த இரு வருடங்களில் கைவிடப்பட்ட வேலைத்திட்டங்கள், தவறிய திட்டங்கள் போன்வற்றை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஜனாதிபதி மீண்டும் சிந்திக்க நேர்ந்துள்ளது.
அவற்றை பற்றி சிந்தித்து எதிர்வரும் மூன்று வருடங்களில் அவற்றை முறையாக திட்டமிட்டு பயணித்தால் அவருக்கும் அவரது பெயருக்கும் சிறப்பு. இது நாம் உருவாக்கிய அரசாங்கம். அநீதிகளும் இருக்கின்றன.
பிரதேச சபைகளில் வரவு செலவுத் திட்டத்துக்கு, எமக்கு ஆதரவு கிடைக்காது போல் தெரிகிறது. சுயாதீனமான தீர்மானம் எடுக்க வேண்டும். இந்தக் கட்சி அதற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க போவதில்லை.
நாம் தான் அதற்கு பதில் வழங்க வேண்டும். அடுத்தது கிராமத்தில் உள்ள கிளை அலுவலகங்களில் தான் உங்கள் பங்கு. அதையே தற்போது நாம்செய்ய வேண்டும். நாம் இங்கிருந்து வெளியேற வேண்டும்.
அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் நாளை முடிவெடுத்தாலும், நன்றாக மதிப்பாய்வு செய்து முடிவெடுக்குமாறு மத்திய குழுவுக்கு அறிவித்துள்ளோம்.
இதுதொடர்பில் நாளைய தினமே இந்த பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வெளியுறுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இதுதொடர்பில் ஏற்கனவே கூறியுள்ளோம். கட்சி என்ற முறையில் நாங்கள் அந்த முடிவை எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.





கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
