எந்தவொரு சவாலையும் எதிர்நோக்க தயார்! முன்னாள் ஜனாதிபதியின் மகன் உறுதி
பொலனறுவை மக்களுக்காக எந்தவொரு சவாலையும் எதிர்நோக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் (Maithripala Sirisena) புதல்வர் தஹாம் சிறிசேன (Daham Sirisena) தெரிவித்துள்ளார்.
பொலனறுவை என்பது தமது தந்தையின் இருதயம் போன்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொலனறுவை மாவட்ட சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக தஹம் அரசியலில் கால் பதிக்கின்றார். நாட்டின் இளைஞர்கள் வெளிநாடு செல்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேலையில்லாப் பிரச்சினைகளினால் திண்டாடுவோருக்கு உரிய தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.





ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ரிலீஸ் முன்பே பிரதீப் ரங்கநாதன் Dude திரைப்படம் செய்துள்ள கலெக்ஷன்... தயாரிப்பு நிறுவனம் ஹேப்பி Cineulagam
