ஐ.பி.எல் போட்டித் தொடரில் மகுடம் சூடியது றோயல் சலன்செஜர்ஸ் பங்களுரு அணி
இ்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்) ரி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் றோயல் சலன்செஜர்ஸ் பங்களுரு அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
பெரும் எதிர்ப்பார்ப்பிற்கு மத்தியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களுரு அணி, குஜராத் டைடன்ஸ் அணியை 5 விக்கட்டுகளினால் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தியாவின் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெங்களுரு அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் வொஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 50 ஓட்டங்களையும் நிசாந்த் சிந்து 20 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் ராசீக் சலாம் மூன்று விக்கட்டுகளையும், புவனேஸவர் குமார் மற்றும் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய றோயல் சலென்ஜர்ஸ் அணி 18 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கினை (161 ஓட்டங்களை பெற்றது) எட்டியது.
அபாரமாக துடுப்பெடுத்தாடிய விராட் கொஹ்லி ஆட்டமிழக்காமல் 42 பந்து களில் 3 சிக்ஸர் 11 பவுண்டரிகள் அடங்களாக 75 ஓட்டங்களையும் வெங்கடேஸ் ஐயர் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் குஜராத் அணியின் சார்பில் ராசீத் கான் இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினார்.
றோயால் சலன்ஜர்ஸ் பங்களுரு அணி தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் சாம்பயின் பட்டம் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
டாடா ஐ.பி.எல் 2026 (TATA IPL 2026) கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 28, 2026 அன்று தொடங்கி, இன்று மே 31, 2026 வரை மிக விறுவிறுப்பாக நடைபெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், ஒட்டுமொத்தமாக 74 போட்டிகள் நடத்தப்பட்டன.
லீக் சுற்றுகளின் முடிவில் றோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), குஜராத் டைட்டன்ஸ் (GT), சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH), மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஆகிய 4 அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன.
இதில் நடைபெற்ற முதலாவது தகுதிச் சுற்றில் (Qualifier 1) குஜராத் அணியை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
தொடர்ந்து நடந்த எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் வீழ்த்திய போதிலும், இரண்டாவது தகுதிச் சுற்றில் (Qualifier 2) ராஜஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 10 மணி நேரம் முன்
சர்ச்சைக்கு மத்தியிலும் CM விஜய் - த்ரிஷா ஜோடியாக அஜித் தயாருக்கு அஞ்சலி! படுவைரலாகும் வீடியோ Manithan
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam