யாழில் அதிகரிக்கும் எலிக்காய்ச்சல் நோயாளர்கள்: தொடரும் தடுப்பு நடவடிக்கைகள்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இதுவரை 121 பேர் எலிக்காய்ச்சலுக்கு உள்ளாகியவர்களாக இணங்காணப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் அவர் இது தொடர்பில் தகவல் வழங்கியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ். போதனா வைத்தியசாலையில் 08 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணித்தியாலங்களில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில், எலிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 06 நோயாளர்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் 05 நோயாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்நோய் நிலைமை காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |