பிணையில் இருப்பவருக்கு அமைச்சுப் பதவியா..! ஜனாதிபதியின் திட்டத்தை கேலி செய்த எதிரணி
நீதிமன்றத்தில் மோசடி வழக்கு நிலுவையில் உள்ள ஒருவருக்கு நாட்டின் முக்கிய அமைச்சுப் பதவியை வழங்கியதன் மூலம், அந்த மோசடிகளில் ஜனாதிபதிக்கும் பங்குண்டா? என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. சாடியுள்ளார்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு எதிராக நேற்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா
நிலக்கரி மோசடி
"தற்போது நிலக்கரி மோசடி குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள குமார ஜயக்கொடி, முன்னதாக அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக இருந்தபோது உரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

அங்கு இடம்பெற்ற பாரிய ஊழல் தொடர்பில் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதுடன், தற்போது அவர் பிணையிலேயே வெளியே உள்ளார்.
தமது நண்பர் ஊழல்வாதி என்பது தெரிந்திருந்தும், அவருக்கு நாட்டின் மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்பை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஊழலுக்கு எதிராகப் பேசுவதாகக் கூறும் ஜனாதிபதி, மோசடிப் பேர்வழிக்கு அமைச்சுப் பதவி வழங்கியிருப்பதன் பின்னணியில், அந்த மோசடிப் பணத்தில் ஜனாதிபதிக்கும் பங்கு செல்கின்றதோ என நாம் சந்தேகிக்கின்றோம்.
நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல்
நிலக்கரி கொள்வனவில் பாரிய ஊழல் இடம்பெற்றுள்ளதை கணக்காய்வு அறிக்கை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது.

இதனால் ஏற்பட்டுள்ள பில்லியன் கணக்கான நட்டம் மக்கள் மீதே சுமத்தப்படவுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க, இது குறித்து ஜனாதிபதி கிஞ்சித்தும் கவலைப்படாமல் மௌனம் காப்பது ஏன்?
நண்பர்களுக்குச் சலுகை வழங்குவதில்லை எனக் கூறி அதிகாரத்தைப் பிடித்தவர்கள், தற்போது தமக்குத் தேர்தல் செலவு செய்தவர்களைத் தாராளமாகக் கவனித்து வருகின்றனர்.
தம்மிக பெரேரா முதல் மேல்மாகாண ஆளுநர் வரை பலருக்குச் சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. மத்திய வங்கி மோசடி குறித்து மேடைக்கு மேடை பேசியவர்கள், இதுவரை ஒருவருக்கு எதிராகவேனும் நடவடிக்கை எடுத்தார்களா?" - என்று ரஞ்சித் மத்தும பண்டார காட்டமாக வினவினார்.
நாடு முழுவதும் தீவிர வெப்பநிலை..! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri