ரணில் - விமல் இடையே இரகசிய சந்திப்பு : கூட்டு எதிர்க்கட்சியை பலப்படுத்த நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ன,போர் வீரர்கள் நினைவுத் தூபி அருகே ஏற்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தொலைபேசி அழைப்பொன்றின் வாயிலாக விமல் வீரவன்சவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியை பலப்படுத்த
அத்துடன் ஓய்வான நேரமொன்றில் தன்னைச் சந்திக்க வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
அதனையடுத்து கொழும்பு, கொள்ளுப்பிட்டி, ஐந்தாம் ஒழுங்கையில் உள்ள ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ன சென்றிருந்த நிலையில் , இருவரும் நீண்ட நேரம் அரசியல் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன்போது கூட்டு எதிர்க்கட்சியினை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ரணில், அதில் விமல் வீரவன்சவும் முக்கிய பங்களிப்பொன்றை வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
விமலும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார். மிக விரைவில் ஐக்கிய மக்கள் சக்தி தவிர்ந்த எதிர்க்கட்சிகளின் ஏனைய கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைத்து கூட்டு எதிர்க்கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
பாக்ஸ் ஆபீஸில் பட்டையைக் கிளப்பும் ஜெயிலர் 2! 3 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? Manithan
அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த ட்ரம்ப்: வேலை இழக்கும் அபாயம் News Lankasri