ஆசியாவின் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்க இலங்கை உதவாது: ரணில்
ஆசியாவின் சமாதானத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எதற்கும் இலங்கை உதவிகளை வழங்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொருளாதாரம்
ஆசிய பூகோள அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய வலய அரசியலுக்கும் இடையில் பாரியளவில் வித்தியாசங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வித்தியாசங்களை கண்டறிந்து கொண்டு சமாதானத்தையும், ஸ்திரத்தன்மையையும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டாண்டு தசாப்த காலப் பகுதியில் இலங்கையை பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையச் செய்ய அணிசேரா கொள்கைகளை பின்பற்ற வேண்டுமென தெரிவித்துள்ளார்.