ரணிலை கைது செய்யுமாறு சிஐடியில் முறைப்பாடு செய்த தேரர்
மிகிந்தலையில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அனுலா சைத்தியை 300 மில்லியன் ரூபாவுக்கு விற்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஒன்பது பேருக்கு எதிராக மிகிந்தலை விகாராதிபதி தம்மரதன தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 22 ஆம் திகதி இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
2,000 ஆண்டுகள் பழைமையானது
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புத்த சாசன முன்னாள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, முன்னாள் தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் துசித மெண்டிஸ், முன்னாள் தொல்பொருள் இயக்குநர் நாயகம் நிஷாந்தி ஜெயசிங்க, திட்டமிடல் இயக்குநர் அனுர பண்டார ஆகிய ஒன்பது பேர் இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான சைத்தியை மிக மோசடியான முறையில் விற்கப்பட்டுள்ளது. மல்வத்த மகாநாயக்க தேரரும் ஏமாற்றப்பட்டார். தேரர்களுக்கு இது குறித்து தெரியாது.
இது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை நடவடிக்கை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்” என தேரர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.




