நாட்டுக்கு ரணிலின் வெற்றி அவசியம் : டக்ளஸ் வலியுறுத்து
நாட்டில் வன்முறை சூழல் உருவாகிய நேரத்தில் ரணில் விக்ரமசிங்கதான் இந்த நாட்டை பொறுப்பேற்று வழிநடத்த சரியானவர் என்பதை நான் எவ்வாறு அன்று திடமாக எடுத்துக் கூறியிருந்தேனோ அதேபோன்றுதான் அடுத்த அரசியல் பருவகாலத்திலும் நாட்டுக்கு சிறப்பான எதிர்காலத்தை கொடுக்க அவரது தேர்தல் வெற்றி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை காரைதீவில் ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் வெற்றியை வலுப்படுத்துவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் இலக்குகளை அடைய முயற்சி
மேலும் கூறுகைியில், “சில சக்திகளின் சுயநலத் தேவைகளுக்காக நாட்டில் வன்முறை தலைதூக்கிய நேரத்தில் நாட்டை தற்தணிவுடன் பொறுப்பேற்று அந்த சூழ்நிலையிலிருந்து விடுவித்து பொருளாதார ரீதியில் நாட்டை முன்னேற வழிகாட்டியவர் ரணில் விக்ரமசிங்க தான்.

குறிப்பாக ஏனைய தலைவர்கள் முடியாது என்று கூறுகையில் தற்துணிவுடன் ஆட்சியை ஏற்றார்.
இந்நாட்டு மக்கள் உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி தவிக்கும் போது சஜித்தோ, அநுரவோ கண்டுகொள்ளவில்லை. மருந்து இல்லாமல் மக்கள் இறந்தபோது அவர்கள் வருத்தப்படவில்லை. அவர்கள் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய முயற்சித்தார்கள். அதுமட்டுமல்லாது ஓடி ஒளித்தார்கள்.
அவ்வாறு கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியைப் பாதுகாக்கும் வகையில் எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி எரிவாயு சிலிண்டருக்கு வாக்களித்து அவரை வெற்றிபெறச் செய்வதே நாட்டு மக்களாகிய உங்களது பிரதி உபகாரமாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 15 மணி நேரம் முன்
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri