ரணிலின் நேரடி தலையீட்டில் கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெறாத கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை அமைப்பது தொடர்பாக இன்னும் இறுதிமுடிவ எட்டப்படவில்லை.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர், கொழும்பு மாநகர சபையில் நிலவும் அதிகாரப் போராட்டத்தில் தலையிட அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தலைவர்களுடன் கலந்துரையாடல்
அவர் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் பல தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
அத்துடன் சுயேச்சை குழுக்கள் மற்றும் சிறு கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் கொழும்பு நகருக்கு பொருத்தமான திறமையுடைய ஒருவருரை கொழும்பு மேயர் பதவிக்கு நியமிப்பது குறித்து ரணிலின் தலைமையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
