மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பது தொடர்பில் ரணில் விடுத்துள்ள பணிப்புரை - செய்திகளின் தொகுப்பு
திருகோணமலை மாவட்டத்தில் புதிய மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும்போது, கிழக்கு மாகாண ஆளுநர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்குமாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார்.
அதேநேரம் இந்தியாவின் உதவியுடன் திருகோணமலை மாவட்டத்தைப் பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டம் ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று (24.08.2023) திருகோணமலை விமானப்படைத் தளத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி ரணில் கூறுகையில், இந்தியாவின் உதவியுடன் வலுசக்தி, போக்குவரத்து, துறைமுகம், கப்பல்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் விரைவில் திருகோணமலையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது தொடர்பிலான செய்திகளையும் மேலும் பல செய்திகளையும் உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |