ரணிலுக்கு தயாராகும் நாடாளுமன்ற ஆசனம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாகத் எதிர்கட்சி வட்டாரடங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவதன் ஊடாக ரணிலுக்கான நியமனம் கிடைக்கப்பெறும் என தெரிக்கப்படுகிறது.
எதிர் கட்சிகளுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சியில் உள்ள பல எம்.பி.க்களும் அவருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
பல்வேறு கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு வருமாறு பரிந்துரைத்துள்ள நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |