மஹிந்தவையும் ரணிலையும் சிறையில் அடைக்க வேண்டும்
முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்சவையும், ரணில் விக்ரமசிங்கவையும் சிறையில் அடைக்க வேண்டுமென முன்னணி சமூக செயற்பாட்டாளரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.
.அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீா்த்தி அதுகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் மஹிந்தவும் ரணிலுமே என அவர் தெரிவித்துள்ளார்.
போராட்டத்தின் போது உண்மையான வன்முறையைத் தூண்டியவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக திரிவதாகத் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த கொலைகளும் வன்முறைகளும் ஏற்படுதவற்கான தூண்டுதலாக செயற்பட்டவர்கள் யார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வன்முறைகளைத் தூண்டிய பொலிஸ் மா அதிபர்கள், ரணில் விக்ரமசிங்க, மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டுமென உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக அருட்தந்தை தெரிவித்துள்ளார்.
இந்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri