பிரித்தானிய வரலாற்று புத்தகத்தில் இடம்பெற்ற ரணில்
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இணையவுள்ளார்.
இலங்கையின் அரச தலைவராக, எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பங்குகொண்ட தம்பதியரின் மகனான ரணில் விக்ரமசிங்க, எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பதன் மூலம் இவ்வாறு வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
வரலாற்று பக்கத்தில் ரணில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான எஸ்மன்ட் விக்ரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோர் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் கலந்துகொண்டனர்.
உலக வரலாற்றில் அரச குடும்பத்திற்கு வெளியே இவ்வாறானதொரு வாய்ப்பைப் பெற்ற முதல் நபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri