கொழும்பில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள ரணில்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்சித்தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சூறாவளியை தொடர்ந்து இலங்கை எதிர்கொள்ளும் மிகவும் மோசமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, புதன்கிழமை (03) கொழும்பில் உள்ள அலுவலகத்தில் அனைத்துக்கட்சித் தலைவர்களும் கூட உள்ளனர்.

2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை
ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடுமையான இயற்கை பேரிடரை வெற்றிகரமாக எதிர்கொண்டதில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பிந்தைய காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ரணில் விக்ரமசிங்க இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர்களுக்கு விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் வஜிர அபேவர்தன கூறினார்.
பறப்பதற்கு பாதுகாப்பற்ற 6,000 விமானங்கள்... ஸ்தம்பிக்கும் பிரித்தானிய விமான நிலையங்கள் News Lankasri
900 கடந்த இறப்பு எண்ணிக்கை... இலங்கை உட்பட பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் மூன்று நாடுகள் News Lankasri
ரஜினி படத்திலிருந்து வெளியேறிய சுந்தர் சி.. அடுத்ததாக இயக்கப்போகும் படம் இதுதான்.. ஹீரோ யார் தெரியுமா? Cineulagam