ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது : வடமராட்சி கடல் தொழிலாளர்கள்

Fuel Price In Sri Lanka Jaffna Sri Lanka Economic Crisis Sri Lanka Gota Go Gama
By Siva Thileep May 22, 2022 12:41 PM GMT
Report

ரணில் விக்ரமசிங்க பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனதாக வடமராட்சி கடல் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

வடமராட்சி கடல் தொழிலாளர்கள் இன்று(22) நடத்திய ஊடக சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது : வடமராட்சி கடல் தொழிலாளர்கள் | Ranil Became The Prime Minister Fuel Did Not Come

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தங்களுக்கு கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னரும் மண்ணெண்ணெய் விநியோகம் இடம்பெறவில்லை என்றும் இதனால் தாம் கடற்றொழிலிற்கு செல்ல முடியாது தமது வாழ்வாதாரத்திற்க்காக பெரிதும் சிரமப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு நாளாந்தம் குறைந்தபட்சம் 40 லிட்டர் எரிபொருள் தேவை என்றும், ஆனாலும் கடந்த காலங்களில் வாரத்திற்கு மட்டும் 40 லிட்டர் எரிபொருள் வழங்கப்பட்டதாகவும், அதுவும் கடந்த மாதம் 18ஆம் திகதிக்குப் பின்னர் விநியோகிக்கப்படவில்லை என்றும் தமது கடற்தொழிலில் படகு மற்றும் உபகரணங்களை கரையிலே ஏற்றிவைத்துவிட்டு தாம் தூங்கிக் கொண்டிருப்பதாக கடல் தொழிலாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.  

ரணில் பிரதமராக வந்ததன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் போனது : வடமராட்சி கடல் தொழிலாளர்கள் | Ranil Became The Prime Minister Fuel Did Not Come

வாழ்வாதாரத்திற்கு நாளாந்தம் மிகப் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் அதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பில் தமது தமிழ் அரசியல்வாதிகளும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இல்லையேல் அவர்களது இல்லங்களை முற்றுகையிட்டு “கோட்டா கோ கம” போன்று செயற்படவேண்டிய நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்

தற்போது ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரே வந்த எரிபொருளும் வராமல் விட்டதாகவும், ரணில் ஒரு குள்ள நரியன் என்றும் மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US