ரணிலுக்கு ஏற்படும் உயிர் ஆபத்தை அறிந்த புலனாய்வு துறை! ஸ்னைப்பர் பயன்பாட்டின் பின்னணி என்ன..(Video)
முப்படைகளின் பிரதானிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகளவு அதிகாரங்களை கொடுத்தது தனக்கு ஏற்படவுள்ள உயிர் அச்சுறுத்தலுக்கான பாதுகாப்பின் ஒரு அங்கமாக பார்க்க முடியும் என பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,“இலங்கையின் இராணுவத்தை தனக்கு சார்பாக வைத்திருப்பதற்கு தன்னாலான முயற்சிகளை ரணில் செய்துள்ளார்.
ஆனால் பிரச்சினை என்னவெனில் படை துறையினருக்குள் எப்போதும் பிரிவினை இருக்கும். அதாவது அவர்கள் வெவ்வேறு கொள்கை உடையவர்களாக இருப்பார்கள்.
இந்தவகையில் தான் பாதுகாப்பு உள்ளக தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அதை விசாரிக்குமாறும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் குற்றபுலனாய்வு துறைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமையவே ஜனாதிபதி ரணில் நாட்டை விட்டு வெளியேறுவது, நாட்டுக்குள் வருவது, அவரது வாகன தொடரணி விபரங்கள், அவர் எங்கு வைத்து தாக்கப்படலாம் மற்றும் எவ்வாறு தாக்கப்படலாம் என்பதை புலனாய்வு பிரிவினர் விரிவாக ஆராய்ந்துள்ளனர்.”என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
