தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள்

Protest Fishermen Tamilnadu Srilankannavy
By Independent Writer Feb 15, 2022 06:10 AM GMT
Report

இலங்கை அரசைக் கண்டித்தும், கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கையைக் கண்டித்து இன்று முதல் காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

கடந்த டிசம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக ராமேஸ்வரத்திலிருந்து கடற்தொழிலுக்கு சென்ற 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகளையும், 50க்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இந்த பிரச்சனை குறித்து நேற்று தங்கச்சிமடம் சூசையப்பர் ஆலய வளாகத்தில் ராமேஸ்வரம் கடற்தொழிலாளர்கள், தொழிலாளர்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். 

தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்யும் இலங்கை அரசைக் கண்டித்தும், கடற்தொழிலாளர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை வலியுறுத்தியும் வரும் 21ஆம் திகதி தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் இன்று முதல் ராமேஸ்வரம் விசைப்படகு கடற்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 

கடற்தொழிலாளர்களின் இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

கடற்தொழிலாளர்களின் போராட்டங்கள் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் நேரடியாகவும், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட கடற்தொழில் சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக வரும் 25ஆம் திகதி இலங்கை விஜயம் செய்கிறார். 

அப்போது இலங்கை பிரதமர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சரைச் சந்தித்து தமிழக கடற்தொழிலாளர்களின் பிரச்சினை குறித்துப் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடற்தொழிலாளர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US