இரவு பகல் பாராது மக்களுக்காக பாடுபடும் சஜித்-ஐ.மக்கள் சக்தி மேடையில் ராஜித
நாட்டில் நசுக்கி மிதிக்கப்படும் வறிய மக்களுக்காக அளப்பரிய சேவையை ஆற்றிய முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை பயங்கரவாதிகள் கொலை செய்தனர் எனவும் நாட்டில் வறுமையை போக்குவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதே அவர் செய்த தவறு எனவும் ஐக்கிய மக்கள் சகதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் உப தலைவருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகார சபைக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அபாக்கியமான தலைவிதி

இரவு, பகலாக மக்களுக்காக கடமையாற்றும் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக ஹூ சத்தமிட அனுசரணை வழங்கிய நபர், நாட்டுக்காக என்ன செய்துள்ளார்?. குறைந்தது வறிய மனிதனுக்கு ஒரு பொதியை கூட வழங்கியிருக்க மாட்டார்கள்.
வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு நாடு அபாக்கியமான தலைவிதியை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.அந்த துரதிஷ்டவசமான தலைவிதியில் இருந்து நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு இருக்கின்றது எனவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.
ராஜித அரசாங்கத்துடன் இணைவாரா இல்லையா?

முன்னாள் அமைச்சரான ராஜித சேனாரத்ன அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அவர் அனுராதபுரத்தில் நேற்று நடந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அனுராதபுரம் கிழக்கு தொகுதி அதிகார சபைக்கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்.
வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் நியமிக்கப்பட உள்ள புதிய அமைச்சரவையில் ராஜித சேனாரத்ன இணைந்துக்கொள்ள உள்ளதாக மகிந்த ராஜபக்ச தனதுக்கு நெருக்கமானவர்களிடம் கூறியதாக ஒரு செய்தி இணையத்தள ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
எது எப்படி இருந்த போதிலும் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசியலில் ஈடுபடுவாரா அல்லது அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவியை பெற்றுக்கொள்வாரா என்பது அடுத்த வாரத்திற்குள் தெரியவரும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.
மாகாண சபைத்தேர்தல் தமிழர்களுக்கு ஒரு அபாய எச்சரிக்கை..! 14 மணி நேரம் முன்
சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri