ராஜபக்ச அரசாங்கம் உட்பட பொலிஸ் மா அதிபரும் உடடினயாக வீட்டு செல்ல வேண்டும்: அசேல சம்பத் (Video)
ராஜபக்ச அரசாங்கம் உட்பட பொலிஸ் மா அதிபரையும் உடடினயாக வீட்டு செல்ல வேண்டும் மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் தலைமையகத்தின் முன்றலில் இன்று (20) இடம்பெறும் ஊடக சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இவ் ஊடக சந்திப்பானது நேற்று (19) ரம்புகனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு நீதி கோரியும், இதற்கு யார் அனுமதி கொடுத்தது என்றும் நாட்டில் தற்போது இடம்பெறும் நெருக்கடி நிலைக்கு தீர்வு கோரியும் இவ் ஊடக சந்திப்பு இடம்பெறு வருகின்றது.
இவ் ஊடக சந்திப்பினை அசேல சம்பத் உட்பட பலர் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது இவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் எவ்வித முறைப்பாட்டையோ அல்லது கடிதங்களையோ கையளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




ரிஷப ராசியில் உதயமாகும் புதன் - சுக்கிரன் : இன்று முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
படப்பிடிப்பில் ஏற்பட்ட மூச்சுத்திணறல்.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்ன மருமகள் சீரியல் நடிகர் நவீன் Cineulagam