சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்பு
நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் தினமும் நுாற்றுக்கணக்கான மாணவர்கள் சகதியில் கடந்து சென்று வருவதால் மிகுந்த சிரமமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(18.10.2026) நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் சந்தியில் பிராதான வீதியில் சூழ்ந்திருந்த வெள்ள நீர் வற்றியுள்ள போதிலும் தேங்கிய மண் சகதியாக மாறியதால் இதில் இறங்கி சென்று சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வெள்ள நீர் பாய்ந்து ஓடாமல் இருக்க
நுவரெலியாவில் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக மாலை நேரங்களில் கொட்டித்தீர்க்கும் மழையால் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் கார்லிபேக் சந்தியில் பிராதான வீதியில் அடிக்கடி முற்றிலும் சேறும் சகதியுமாக மாறிவிடுகின்றன.
இதனால் மாணவர்களின் பாதணி, சீருடை சேதம் ஆவதுடன் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

பாடசாலைக்குச் செல்லும் சிறு குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவரும் தங்களின் பாதணி, ஆடைகள் மற்றும் புத்தகப் பைகள் நனையாமலும், சகதி படராமலும் மிகுந்த சிரமத்துடன் ஆபத்தான முறையில் இப்பாதையைக் கடக்க வேண்டியுள்ளது.
எனவே மாணவர்கள் நலன் கருதி இப்பாதையை சீரமைத்து தர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
மேலும் குறித்த பகுதியில் வெள்ள நீர் பாய்ந்து ஓடாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றன.


