பூனைகளிடமிருந்து பாதுகாப்பு பெறவும்: வைத்தியர்களின் எச்சரிக்கை
இலங்கையில் பூனைகளிடமிருந்து நீர்வெறுப்பு நோய் ஏற்படும் போக்கு சமீப காலமாக அதிகரித்து வருகிறது.பூனைகளுக்கும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லாததே இதற்கு முக்கிய காரணம் என தொற்றுநோயியல் பிரிவின் சமூக நோயியல் நிபுணர் அதுல லியனபதிரன கூறியுள்ளார்.
"2030க்குள் ரேபிஸ் இல்லாத இலங்கை" என்ற தலைப்பில் சுகாதார கல்வி பணியகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இதனை கூறினார்.
பூனைகளுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை
கடந்த சில ஆண்டுகளில் நீர்வெறுப்பு (Rabies) சந்தேகத்துடன் பொரல்லை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கொண்டு வரப்பட்ட விலங்குகளில் 16 - 21 சதவீதம் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட பூனைகளாகும் என்று அதுல லியனபதிரன கூறினார்.
நீர்வெறுப்பு நோயால் (Rabies) பாதிக்கப்பட்ட பூனைகளின் கருப்பு நாக்கு தொடர்ந்து பெரிதாகி வலிப்பு, ஆக்ரோஷம், பசியின்மை, எரிச்சல் மற்றும் பக்கவாதம் போன்ற அறிகுறிகளைக் காட்டும்.

பூனைகளை வேறொரு விலங்கு கடிக்கும்போது நோயால் பாதிக்கப்படுகின்றன. கடித்த இடத்தைப் பொறுத்து அந்த விலங்கு எத்தனை நாட்கள் வாழும் என தெரிந்து கொள்ளலாம். நோய்வாய்ப்பட்ட பூனை 7-10 நாட்களில் இறந்துவிடும்.
நாய்களை விட பூனைகளுக்கு கூர்மையான நகங்கள் மற்றும் பற்கள் உள்ளன. எனவே அவை கடித்தல் மற்றும் கீறல்கள் மூலம் மனிதனின் உடலைப் பாதிக்கும் வாய்ப்பு அதிகம்.
2025 ஆம் ஆண்டில், 14 பேர் நீர்வெறுப்பு நோயால் (Rabies) மரணித்துள்ளனர்.இது இலங்கையில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிகக் குறைந்த இறப்புகள் ஆகும். நோய்வாய்ப்பட்ட நாய்கள் கடித்ததில் பதின்மூன்று பேர் நோய் விறுப்பால் இறந்துள்ளனர்.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam