ஈரான் வரம்பு மீறிச் செயற்படுகின்றது – கட்டார் கண்டனம்
ஈரானிய அரசாங்கம் வரம்பு மீறிச் செயற்படுவதாக கட்டார் குற்றம் சுமத்தியுள்ளது. அண்டை நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள், அனுமதிக்கப்பட்ட அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டதாகக் கட்டார் வெளியுறவு அமைச்சு பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுடன் ஈரான் போர் புரிந்து வரும் நிலையில், இப்போரில் நேரடியாகப் சம்பந்தப்படாத அண்டை நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்துவது பிராந்திய பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகக் கட்டார் தெரிவித்துள்ளது.
கட்டார்ர மீது ஈரான் மேற்கொண்டுள்ள தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் "பேரிடர் போன்ற பாதிப்புகளை" ஏற்படுத்தியுள்ளதாக வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி, சுட்டிக்காட்டியுள்ளார்.

அணுமின் நிலையங்கள் அல்லது எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்வதாக அல்-அன்சாரி தெரிவித்துள்ளார்.
போர் மேலும் தீவிரமடைந்தால் அது அனைத்து தரப்பினருக்கும் ஈடுகட்ட முடியாத இழப்புகளைத் தரும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமாதான முயற்சிகளுக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri