அமெரிக்காவிடமிருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்
அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்வதற்காக கட்டார் ஒப்பந்தம் செய்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) 4 நாட்கள் அரசு முறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.
இந்தநிலையிலே நேற்றையதினம் (13) கட்டார் (Qatar) மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியை சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஒப்பந்தம்
கட்டார் விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் 160 விமானங்களை அமெரிக்காவின் போயிங் விமான நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கு குறித்த ஒப்பந்தம் கைச்சாத்தானது.
அத்தோடு, இரு நாடுகளுக்கும் இடையே 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
மேலும், இந்த சந்திப்பின்போது, இரு தலைவர்களும் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
