ஈரான் - அமெரிக்க போர்நிறுத்தம் பலவீனமானது - புடின்!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் பலவீனமானது என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தை ரஷ்யா வரவேற்ற போதிலும் அந்த போர்நிறுத்தம் நிலையற்றதாகவும் மிகவும் பலவீனமானதாகவும் காணப்படுவது நிரூபணமாகியுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், ஈரானுக்கு ரஷ்யா தொடர்ந்து தனது ஆதரவை வழங்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டில் செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோதே புடின் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்த மாநாட்டின் இடையே அவர் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஜூன் மாத மத்தியில், பாகிஸ்தான் மற்றும் கடார் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு, 60 நாட்கள் காலக்கெடுவுடன் கூடிய போர்நிறுத்த நீடிப்பு அதில் வழங்கப்பட்டிருந்தது.
அந்த காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், தற்போதைய போர்நிறுத்தச் சூழல் குறித்து ரஷ்ய அதிபர் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளார்.