வாழைச்சேனை- புனாணை வனவிலங்கு காரியாலயத்தில் திருட்டு
மட்டக்களப்பு- புனானை வனவிலங்கு காரியாலயத்தை உடைத்து அங்கிருந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(03.01.2025) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வாழைச்சேனை- கொழும்பு வீதியில் உள்ள புனாணையில் அமைந்துள்ள வனவிலங்கு பாதுகாப்பு காரியாலயத்தில் கடமையாற்றி வருபவர்கள் வழமைபோல நேற்றுமுன்தினம் (02) மாலையில் கடமை முடிந்ததும் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, நேற்றையதினம் காலையில் காரியாலயத்துக்கு வந்தபோது அங்கு காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டுள்ளதை கண்டு பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர்.

குறித்த காரியாலயத்தின் கதவு உடைக்கப்பட்டு காரியாலயத்துக்கு உள் நுழைந்து அங்கிருந்த சொட்கண் துப்பாக்கி ஒன்று அதற்கான 3 தோட்டாக்கள், துளை கருவியான ரில்லர் ஒன்று, எரிவாயு அவன் ஒன்று ஆகிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.