திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்களின் கவனஈர்ப்புப் போராட்டம்
திருகோணமலை - புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபன ஊழியர்கள் சிலர், தங்களுக்கு 18 மாதங்களாக வழங்கப்படாது இருக்கின்ற, நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி கூட்டுத்தாபனத்துக்கு முன்னால், கவனஈர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புல்மோட்டை கனியமணல் கூட்டுத்தாபனத்தில் கடந்த வருடம் சம்பள அளவுத்திட்டத்தின்கீழ் அமைய அடிப்படையில், சேவையில் அமர்த்தப்பட்ட 83 ஊழியர்கள் இந்த கவனஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.
கவனஈர்ப்பு போராட்டம்
தற்போது கடமையாற்றும் குறித்த ஊழியர்களில், கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 35 பேரும், யூலை மாதம் 48 பேரும் அமைய அடிப்படையில் நியமிக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களில் 34 பேருக்கு 3 மாதங்கள் சம்பளம் வழங்கப்பட்டும் ஏனையவர்களுக்கு இதுவரை எவ்வித கொடுப்பனவுகளும் வழங்கப்படவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக நிர்வாகத்துடன் பலமுறை பேச்சுவார்த்ததைகள் நடத்தியும் சம்பளம் வழங்கப்படாத நிலையில், கடந்த மாதம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொண்ட, கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி, இந்த மாதம் சம்பளம் வழங்கப்படும் என அங்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட போதும், அது நிறைவேற்றப்படவில்லை எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக நிர்வாகத்துடன் பேசியபோது நியமனத்தை நாள் சம்பள அடிப்படையில் மாற்றி நாளாந்த கூலி அடிப்படையில் வழங்குவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்தத் திட்டத்தை எதிர்ப்பு தெரிவித்தும், அடிப்படை சம்பள முறைமையில், சம்பளத்தை வழங்கக் கோரியும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் தமக்கு சரியான தீர்வு கிடைக்கப்பெறும் வரையில் இதை தொடரவிருப்பதாகவும் குறித்த ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.








வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri
