புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய புலமைப் பரிசில் பரீட்சை வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு
முல்லைத்தீவில் (Mullaitivu) புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வெற்றியாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் அருட்பணி றொபின்சன் ஜோசப் தலைமையில் நேற்று முன்தினம் (02.05.2024) இடம்பெற்றுள்ளது.
புலைமைப் பரிசில் பரீட்சை வெற்றியாளர்களையும் விருந்தினர்களையும் பான்ட் வாத்திய இசையுடன் அழைத்து வரப்பட்டு மங்கள சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கௌரவிக்கும் நிகழ்வு
இதன்போது தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மாத்திரமின்றி க.பொ.த சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெற்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கும் கணித பாடத்தில் ஒலிம்பியாட் போட்டியிலும் விளையாட்டுகளில் திறமை பெற்றவர்களுக்கும் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலய பழைய மாணவர் சங்க செயலாளர் சிங்கராசா அருள்நேசனும் சிறப்பு விருந்தினராக முல்லை மறைக்கோட்ட குரு முதல்வர், புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்தந்தை A.Pஅன்ரனிப்பிள்ளை ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளனர்.