இலங்கை அகதிகள் தொடர்பில் தமிழக முதல்வருக்கு அமைச்சர் நாமல் வெளியிட்டுள்ள பதிவு
யுத்தக்காலத்தில் வெளிநாடுகளுக்கு அகதிகளாக சென்று, நாடு திரும்ப விரும்பும் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரிமைகளை அறிவித்த நிலையிலேயே, நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் தளத்தில் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைக்கு மீள வருகைத் தரும் அகதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
While welcoming #TamilNadu CM. @mkstalin's statement on #lka refugees, after the end of the war in 2009, then govt of @PresRajapaksa welcomed back refugees who had fled to TN. According to stats, 3,567 families hv returned back to #lka with the help of UNHRC facilitation 1/2
— Namal Rajapaksa (@RajapaksaNamal) August 28, 2021