கொட்டும் மழையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் ஆர்ப்பாட்டம்
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்றையதினம்(3) இடம்பெற்றுள்ளது.
கொட்டும் மழை
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேட்டினால் நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே 'அரசே நிர்வாக சீரழிவிலிருந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையை மீட்டுத்தா' வைத்தியசாலை பணிப்பாளரை இடமாற்றுமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வைத்தியசாலையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் நிர்வாக சீர் கேட்டினால் நோயாளர்கள் நோய்க்கான சிகிச்சையை பெறமுடியாத தையடுத்து வைத்திய பணிப்பாளரை உடன் இடமாற்றக் கோரி மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.
இதையடுத்து வைத்தியசாலைக்கு முன்னாள் நேற்று(3) மாலையில் கொட்டும் மழையில் மக்கள் ஒன்று திரண்டனர்.
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
இதன்போது வைத்தியசாலையில் இடம்பெற்றுவரும் அடிதடி கலாச்சாரத்தை உடன் நிறுத்து வைத்திய பணிப்பாளரை உடன் வெளியேற்று, நோயாளிகளின் உயிரோடு விளையாடும் வைத்தியரை அதிகாரத்தில்; இருந்து உடனடியாக நீக்கு, வைத்திய அதிகாரியின் சட்டவிரோத நடவடிக்கை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும், போன்ற வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு வைத்திய பணிப்பாளர் வெளியேற வேண்டும், ஜனாதிபதி உடனடி வைத்தியரை விசாரணை செய்ய வேண்டும், என கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பொலிஸ் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டதுடன் கொட்டும் மழையில் மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் மாலை 6.00 மணி வரை இடம்பெற்ற பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை ஜனாதிபதிக்கு இந்த வைத்தியசாலையில் இடம்பெற்ற சீர்கேடுகள் தொடர்பான மனு ஒன்றை அனுப்பியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

