ராஜபக்ஷர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொதுமக்களின் சீற்றம் அதிகரிக்கிறது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக சமூக ஊடகங்களில் மக்கள் சீற்றம் வேகமாக அதிகரித்து வருகிறது.
மின்வெட்டு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு தொடர்வதை அடுத்து, சமூக ஊடகங்களில் ராஜபக்சக்களுக்கு எதிரான கோபம் அதிகரித்து வருகிறது.
சமூக ஊடக பயனர்கள், பல முக்கிய பிரமுகர்கள் உட்பட, தற்போதைய விடயங்கள் தொடர்பில் சமூக ஊடகங்களில் ராஜபக்ஷ நிர்வாகத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளனர்.
இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக ‘வெள்ளை துணி’ பிரசாரம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பொது மக்களின் ஆர்ப்பாட்டங்கள் தொடரவுள்ளன.
நெலும் பொக்குண திரையரங்கிற்கு வெளியே வெள்ளைத் துணி பிரசாரம் ஆரம்பிக்கப்படுவதால் வாகனங்களின் பக்கவாட்டு கண்ணாடியில் வெள்ளைத் துணி கட்டப்படவுள்ளன. நாளை மாலை 5 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பிரசாரம் எதிர்வரும் வாரத்தில் அதிகளவான வாகன ஓட்டிகள் பக்கவாட்டுக் கண்ணாடியில் வெள்ளைத் துணியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் சங்கிலித் தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புதன்கிழமை இரவு வாகன ஓட்டிகள் ராஜபக்ஷ நிர்வாகத்திற்கு எதிராக தங்கள் ஒலி எழுப்பிகளை ஒலிக்கச் செய்தனர்.
இதற்கிடையில், சில வணிக வளாகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அவற்றின் மின்பிறப்பாக்கிகளை இயக்க எரிபொருள் தீர்ந்துவிட்டதால் நேற்று முழு இருளில் மூழ்கின.
-தினக்குரல்-

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
