இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல்

Sri Lanka Sri Lanka Food Crisis Dengue Prevalence in Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Mayuri Jun 17, 2022 08:39 AM GMT
Report

இலங்கையில் இன்றைய தினம் விடுமுறையிலுள்ள அரச பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி வெள்ளிக்கிழமை விடுமுறையை வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அபாய வலயங்களாக 74 பிரிவுகள் அடையாளம்

டெங்கு அபாயம் உள்ள பிரதேசங்களாக 74 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Public Leave In Srilanka Important Notice

அவற்றுள் சீதுவ, குண்டசாலை, வத்தேகம, குளியாப்பிட்டிய, வாரியபொல, பதுளை, பசறை, வெலிமடை, பெல்மடுல்ல மற்றும் கலிகமுவ ஆகியவை அடங்குவதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு பரவல் கொழும்பில் தீவிரம்! ஆபத்தான 74 இடங்கள்! 

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு மொத்தமாக 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் சுற்றாடலை சுத்தமாக பேணுவதன் மூலம் டெங்கை கட்டுப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் நுளம்புகள் 10 வருடங்களின் பின்னர் மேல் மாகாணத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார நுளம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமணசேன தெரிவித்துள்ளார்.

மேலும், நாடளாவிய ரீதியில் நுளம்பு பெருகும் பிரிட்டோ சுட்டெண் தற்போது 20 ஐ தாண்டியுள்ளது. இந்த நிலைமை டெங்கு தொற்றுநோய்க்கு வழிவகுக்கும் முக்கிய காரணியாக குறிப்பிடப்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், நுளம்பின் முட்டை வரட்சியான காலநிலையில் ஒரு வருடத்திற்கும் மேல் இருக்கும். மேலும் அந்த முட்டை தண்ணீருடன் சேரும் போது 8 முதல் 10 நாட்களுக்குள் ​​​​ மீண்டும் நுளம்புகள் உருவாகி சூழலில் சேருகின்றன.

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Public Leave In Srilanka Important Notice

இதன்படி, அதிக அளவில் சுற்றுச்சூழலில் எரியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் போத்தல்கள் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளது.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டடங்களில் காணப்படும் கொங்கிரீட், (Concrete slabs) நுளம்புகள் உற்பத்தியாகும் இடமாக மாறியுள்ளதாகவும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

விடுமுறையில் உள்ளவர்களுக்கான அவசர அறிவுறுத்தல்

இவ்வாறான சூழலிலேயே டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருகும் இடங்கள் அதிகரித்து வருவதால், சுற்றுச்சூழலை சுத்தம் செய்யுமாறு அந்தச் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில், கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டில், 31,000 டெங்கு வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள போதும் கடந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 25,000 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன.

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Public Leave In Srilanka Important Notice

இந்த வழக்குகளில் பெரும்பாலானவை மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.

டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பினால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே, இந்த அபாயம் குறித்து மக்கள் மற்றும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், எதிர்காலத்தில் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளில் டெங்கு பரவல் தொடர்பாக கவனம் செலுத்தத் தவறியுள்ளோம்.

எனவே, அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வெள்ளிக்கிழமை விடுமுறையை பயன்படுத்தி விடுமுறையில் உள்ளவர்கள் தங்கள் சொந்த தோட்டங்களையும் சுற்றியுள்ள சூழலையும் சுத்தம் செய்ய அன்றைய நாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Public Leave In Srilanka Important Notice

அரச ஊழியர்களுக்கு விடுமுறை

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் பொது விடுமுறை வழங்குவது குறித்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அரச ஊழியர்களுக்கான விடுமுறை! அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானம் 

என்றபோதும் இதில் நீர், மின்சாரம், சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

பாடசாலைகளுக்கு விடுமுறை

இன்றைய தினம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க நேற்றைய தினம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.

இலங்கையில் இன்று விடுமுறையில் உள்ளவர்களுக்கு அவசர அறிவுறுத்தல் | Public Leave In Srilanka Important Notice

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு கூறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US