சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது மதிப்பாய்வு குறித்து வெளியான அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், இலங்கையின் நான்காவது மதிப்பாய்வு குறித்து அந்த நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு எதிர்வரும் ஜூலை 01 ஆம் திகதி மதிப்பீடு செய்ய உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகமொன்று வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
இதன்போது, அவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டபோது இலங்கையின் மறுசீரமைப்பு மற்றும் மீட்சி செயல்பாட்டில், சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாக இருக்கும் என்று உறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

அன்று சாப்பாட்டுக்கே வழியில்லை... இன்று 30 கோடி நிறுவனத்தின் முதலாளி: நடிகர் சூர்யாவே காரணம் Manithan

டெஸ்ட் வரலாற்றில் 1 ரன்னில் த்ரில் வெற்றிகள்: மிகச்சிறிய வித்தியாசத்தில் முடிந்த டாப் 10 போட்டிகள் News Lankasri
