தற்போதைய அரசாங்கத்தை வெறுப்பதற்கு இதுவே காரணம் : மக்கள் குரல் (VIDEO)
இலங்கையின் இத்தனை வருட அரசியல் வரலாற்றில் சந்தோஷமாக வாழ்ந்த காலம் என்றால் அது ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில் தான் என பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்தின் “கதை கேளு” நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியில் அன்றாட வாழ்க்கையில் குடும்பத்தை முன்னெடுத்து செல்வது மிகவும் கடினமாக உள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் தான் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தோம். அந்த ஆட்சி காலத்தில் இது போன்ற நெருக்கடிகள் இருக்கவில்லை.பொருளாதார நெருக்கடியும், களவும் தான் தற்போதைய அரசாங்கத்தை வெறுப்பதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்துக்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்.