புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை

Parliament of Sri Lanka Sri Lanka Prevention of Terrorism Act
By Kamal Oct 21, 2026 11:55 PM GMT
Report

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது துஷ்பிரயோகங்களுக்குப் பரந்த வாய்ப்பளிப்பதுடன், மனித உரிமைகளுக்குக் கடுமையான அச்சுறுத்தல்களையும் ஏற்படுத்துவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தனது புதிய சட்டப் பகுப்பாய்வில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த விடயங்களைத் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வெளியிடப்பட்ட உத்தேச சட்ட மூலத:துடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டபோதிலும், 'அரசினைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்', பயங்கரவாதம் குறித்த தெளிவற்ற மற்றும் மிகப்பரந்த வரைவிலக்கணத்தையே இன்னமும் கொண்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை எச்சரிக்கை | Pta Must Replaced Proper Manner

அடக்குமுறை நிறைந்ததும் நீண்டகாலமாக நடைமுறையிலுள்ளதுமான பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளது. இது தன்னிச்சையான விளக்கங்களுக்கும்; மாற்றுக் கருத்துக்கள், போராட்டங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் செயற்பாடுகளைக் குற்றமயமாக்குவதற்கும் வழிவகுக்கும் என சர்வதேச மன்னிப்புச்சசபை சுட்டிக்காட்டியுள்ளது.

அக்டோபர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம், இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்குபவையாக உள்ளதா என்பதைப் பரிசீலிப்பதற்காக தற்போது உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில், எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றில் இந்தச் சட்டமூலம் தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.

"அரசாங்கத்தின் விமர்சகர்கள், மாற்றுக் கருத்துள்ளவர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக அதிகாரிகளால் பலமுறை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான எந்தவொரு முயற்சியும் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய பணிப்பாளர் ஸ்மிருதி சிங் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டமூலமானது இத்தகைய அடக்குமுறை மரபிலிருந்து விடுபட வேண்டுமே தவிர, மாற்றுக் கருத்துக்களை நசுக்குவதற்கு அதிகாரிகளுக்கு புதிய கருவிகளை வழங்குவதாக அமையக் கூடாது" என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

"இவ்வாறான சட்டங்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையின் வரலாற்றைக் கருத்திற் கொண்டு, வலுவான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய பாதுகாப்பு வழிமுறைகள் மிகவும் அவசியமானவை என தெரிவித்துள்ளார். எனினும், அவை இந்தச் சட்டமூலத்தில் போதியளவு சேர்க்கப்படவில்லை என்பது தீவிர மனித உரிமை கரிசனைகளை எழுப்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கான பரந்த வரைவிலக்கணத்திற்கு மேலதிகமாக, குற்றச்சாட்டு எதுவுமின்றி ஒரு வருடம் வரையிலும், வழக்கு விசாரணைக்கு முந்தைய காலப்பகுதியில் மேலும் ஒரு வருடம் வரையிலும் தடுப்புக் காவலில் வைக்க இச்சட்டமூலம் அனுமதி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.

இது தன்னிச்சையான தடுப்புக் காவலில் இருந்து விடுபடுவதற்கான உரிமை, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை ஒருவர் குற்றமற்றவர் என்ற அனுமானம் மற்றும் நியாயமான காலத்திற்குள் வழக்கு விசாரணையைப் பெறுவதற்கான உரிமை ஆகியவற்றை மீறுவதாக சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியுள்ளது.

அரசு வழக்கை விசாரணைக்குக் கொண்டுவரத் தாமதிக்கும் வரை எவரும் பல ஆண்டுகள் சிறையில் இருக்கக் கூடாது," என்று ஸ்மிருதி சிங் மேலும் கூறியுள்ளார்.

"இந்தச் சட்டமூலத்தைத் திரும்பப் பெற்று, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு ஏற்ப சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு இலங்கை நாடாளுமன்றத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். அதுவரை பயங்கரவாதத் தடைச் சட்டம் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், Vejle, Denmark

21 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark, London, United Kingdom

16 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US