கட்டுகட்டுகஸ்தோட்டை வைத்தியசாலை அவரச சிகிச்சைப் பிரிவுக்கு நவீன ரக கட்டில் வழங்கி வைப்பு
கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு புதிய நவீன கட்டில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா - டில்லியில் அமைந்துள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராயலத்தின் கவுன்சிலர் வைத்தியர் அன்வர் ஹம்தானியின் வழிகாட்டுதலில் இது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் கொரோனா செயலணி அமைப்பினால் அக்குறணை கட்டுகஸ்தோட்டை வைத்தியசாலையின் அவசர சிகிக்கைப் பிரிவுக்கு நவீன வசதிகளைக் கொண்ட கட்டிலை வழங்கி வைக்கும் வைபவம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அவசர சிகிச்சைப் பிரிவு
இந்நிகழ்வு வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் இரந்த தலைமையில் இடம்பெற்றது.
கண்டி பள்ளிவாசலகள்; சமேளனத்தின் தலைவர் கே. ஆர். சீத்தீக் தலைமையிலான குழுவினர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இரந்த்தவிடம் நேற்று உத்தியோகபூர்வமாக கைளித்தனர்.
இதன் போது முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார், வைத்தியாலையின் சுகாதார அதிகாரிகள்,பள்ளிவாசல் சம்மேளனத்தின் செயலாளர் என். எம். எம். மன்சூர், உப தலைவர் ரீஸா வாஹிட், உப செயலாளர் மௌலவி ஸக்கி, கட்டுகஸ்தோட்டை ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள். கொரோனா செயலணி அமைப்பின் உறுப்பினர் எச். எல். ஏம். இல்ஹாம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.