ஈரானில் தொடரும் பதற்ற நிலை - பலி எண்ணிக்கை 41 ஆக உயர்வு
இளம் குர்திஷ் பெண் மஹ்சா அமினி பொலிஸ் காவலில் இறந்ததற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஈரானியர்கள் பத்தாவது நாளாகவும் நீதித்துறையின் எச்சரிக்கையை மீறி வீதிகளில் இறங்கியுள்ளனர்.
அமைதியின்மை தொடங்கியதில் இருந்து குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் உண்மையான எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓஸ்லோவை தளமாகக் கொண்ட குழுவான ஈரான் மனித உரிமைகள் (IHR) ஞாயிற்றுக்கிழமை மாலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 57 என்று தெரிவித்துள்ளது.
போராட்டத்தை தொடர்ந்து பலர் கைது
ஆனால் தற்போதைய இணைய முடக்கம் சமீபத்திய இரவுகளில் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் பரவிய சூழலில் இறப்புகளை உறுதிப்படுத்துவது கடினமாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் எச்சரிக்கையை எதிரொலிக்கும் வகையில், நீதித்துறைத் தலைவர் கோலம்ஹோசைன் மொஹ்செனி எஜீ கலவரங்களை தூண்டியவர்களுக்கு எதிராக மெத்தனம் இல்லாமல் தீர்க்கமான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தினார் என்று நீதித்துறையின் மிசான் ஆன்லைன் இணையதளம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 16 அன்று அமினியின் மரணத்திற்குப் பிறகு முதலில் அமைதியின்மை வெடித்ததில் இருந்து நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் இரவு நேர ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரவில் தொடரும் போராட்டங்கள்
ஜினா என்ற குர்திஷ் முதல் பெயர் கொண்ட அமினி, அதற்கு மூன்று நாட்களுக்கு முன், இறுக்கமாக பொருத்தப்பட்ட ஹிஜாப் தலை உறைகளை கட்டாயமாக்கும் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
ஈரான் மனித உரிமைகள் அமைப்பால் வெளியிட்டப்பட்ட படங்கள் தெஹ்ரானின் தெருக்களில் எதிர்ப்பாளர்கள் சர்வாதிகாரிக்கு மரணம் என்று கூச்சலிட்டதைக் காட்டுகின்றது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவுக்குப் பிறகு பல இடங்களில் போராட்டங்கள் நடந்து வருவதாக சாட்சிகள் AFP செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
