மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர்! வெளியான தகவல்
மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிரிஹான பொலிஸ்நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவஸ்திகா அருலிங்கம் என்ற சட்டத்தரணி ஒருவர் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்துடன் தொடர்பற்ற பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளாத தமிழ் முஸ்லீம் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று இரவு மின்துண்டிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, விலையேற்றம் போன்றவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இல்லம் அமைந்துள்ள மிரிஹான பகுதியில் ஒன்றுதிரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டதுடன் சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கடும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டது.
எனினும், நிலைமை கைமீறி செல்லவே கொழும்பு பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இன்று காலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டது.
அத்துடன், பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதுடன் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இதுவரை நாற்பதிற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
