யாழில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்திற்கு அழைப்பு
பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர சபை தவிசாளர் தலைமையில் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது.
பருத்தித்துறை நகரசபையில் இன்று(22) காலை 9:00 மணியளவில் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த அனைத்து கட்சிகளும் இணைந்து நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை துறைமுகத்திற்கு எதிர் பக்கமுள்ள பருத்தித்துறை நீதிமன்றம், பருத்தித்துறை தபாலகம், பருத்தித்துறை நகரசபை ஆகியவற்றிற்கு செந்தமான காணியிலுள்ள இராணுவ முகாமை அகற்றக்கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

பருத்தித்துறை நகரை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் இருந்து ஆரம்பித்து பருத்தித்துறை பிரதேச செயலகம் வரை சென்று மனு வழங்கப்பட உள்ளது.
மேலதிக தகவல்-தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri