நாளை கொழும்பில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு தடை
சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம் உட்பட பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மாணவர் மன்றம் ஏற்பாடு செய்திருந்த போராட்டம் பேரணிக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்று(27) பிற்பகல் 2.30 முதல் நாளை(28) மாலை 6 மணி வரை குறித்த போராட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக கொழும்பு நகர மண்டபத்தை சுற்றியுள்ள பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது.
இடையூறு விளைவிக்கும் போராட்டங்கள்
இதனால் வீதிகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தப்படுவதாக கூறி நீதிமன்றம் தடை உத்தரவை அறிவித்துள்ளது.
இதன்படி, சுகாதார அமைச்சின் நுழைவாயிலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில், பிரதான வீதி, டீன்ஸ் வீதி, செரம் வீதி, ரிஜண்ட் வீதி மற்றும் தேசிய வைத்தியசாலை சதுக்கத்தைச் சுற்றியுள்ள நடைபாதைகளை மறித்து போராட்டம் மற்றும் பேரணிகளை நடத்த முடியாது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 17 மணி நேரம் முன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இப்படி.. நீச்சல் உடையில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
